படையில் இணைய தயாரான தனுஷ் ஆர்டில்லரி

படையில் இணைய தயாரான தனுஷ் ஆர்டில்லரி


இந்தியா சொந்தமாக மேம்படுத்திய அதிக தூரம் செல்லும் ஆர்டில்லரி தன் கடைசி சோதனையை வெற்றிகரமாக முடித்துள்து.பொக்ரானில் நடைபெற்ற சோதனையில் வெற்றிகரமாகசெயல்பட்டது.

ஜீன் 2-6, வரை ஐம்பது ரவுண்டு ஷெல்கள் ஆறு தனுஷ் ஆர்டில்லரியில் இருந்து வெடித்து சோதனை செய்யப்பட்டது.

தனுஷ் 155mm x 45mm காலிபர் ஆர்டில்லரி துப்பாக்கி ஆகும்.அதை டெசி போபர்ஸ் எனவும் அழைக்கிறார்கள்.

2014வரை பெறப்பட்ட கிட்டதட்ட 11 துப்பாக்கியில் இருந்து இதுவரை 4200 ரவுண்டுகள் சுடப்பட்டன.

மேலும் துப்பாக்கி ஏற்கனவே குளிர்கால சோதனைக்காக சிக்கிம் அனுப்பப்பட்டது.அதே போல வெப்பக்கால சோதனைக்காக பாலசோர்,ஒடிசா மற்றும் போக்ரான் பாலைவனத்திற்கு அனுப்பப்பட்டது.

இத்துடன் இந்த துப்பாக்கி விரைவில் படையில் இணைய உள்ளது.

No comments: